தர்ப்பணம், சிரார்த்தம் (திதி)

எள்ளும் தண்ணீரும் எங்கே போயின

மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இது பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சகஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும்.
ஆதித்யம் (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலே விருந்து என்பது இது தான். இது மனுஷ யக்ஞம். பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷ்களின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிரமண ஜாதியினர் மட்டும் செய்வது.

எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லா ஜீவராசிகளுக்குக் கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம். பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம். வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய

திருவள்ளுவரும்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார் என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையார்களுக்கும் நமது கடைமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்று வேதமாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்தவை அவ்வை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையார் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும். அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.

பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை சீர்திருத்தக்காரர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது. எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண்முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டு விட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்கு சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். உங்களில் பலருக்கும் மனசுகள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம். உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒருவர் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பின் பணம் கட்ட வேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும் படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலா பீயுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ணவேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் போய்ச் சேர்ந்துவிடும். அனுப்பியாகி விட்டது என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், என் பணம் இங்கே தானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும் என்று கேட்டார். அது போய்ச் சேர்ந்¢துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். கட்டுக் கடகட என்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லோட் லோட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும். என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது. ஆனால் பணம் சேர்ந்து விட்டது.

தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாறுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டு விடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேஷ்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத் தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.

தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லை அல்லவா. மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித் தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத் தான் ஏற்றுக் கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.

பரோபகாரம்

பிதிர்கடன், பரமேசுவர பூஜையான வேத யக்யம் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதிக மதம் விதிக்கிறது. திருவள்ளுவரும் இதே தர்மத்தைத்தான் விதித்திருக்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வள்ளுவர் வேதப் பிராமணத்தை மதித்தே குரள் எழுதினார் மிகவும் ஆதரவாக இருக்கப்பட்ட குரள்களில் இதுவும் ஒன்று. திருவள்ளுவர் வைதிக மதஸ்தரே அல்ல. அவர் ஜைனர் அல்லது பெனத்தர் அல்லது எல்லா மதங்களையும் கடந்தவர். வேதம் கூறும் தர்மங்களுள் ஹிமைஸையுள்ள யாகத்தைத் திருவள்ளுவர் வெளிப்படையாகவே கண்டிக்கிறார் என்று சிலருக்கு அபிப்பிராயம். கீழ்கண்டகுரளை மேற்கோள் காட்டுகிறார்கள்.
அவிசெரித்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
ஹவிஸை அக்னியில் ஆஹுதி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம் என்று இதன் அர்த்தம். இதைப் படித்த பின்னும் கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள் அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே.

காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர். ஆயிரம் கங்கையை விட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொன்னால் கங்கையும் உயர்ந்தது என்று சொல்னால், கங்கையும் உயர்ந்ததும் என்றே அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையை விட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா. அப்படியே திருவள்ளுவர் அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ஆயிரம் யாகத்தை விட அஹிம்ஸை உயர்ந்தது என்றால் யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச் சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்.
இந்தக் குறள் இல்லர இயலில் சொல்லப்படவில்லை. துறவற இயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை. அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதித்திருக்கிறது. அதையே வள்ளுவரும் வலியுறுத்துகிறார். உலகத்துக்கெல்லாம் உபயேகமான ஒரு கிரந்தத்தை தந்திருக்கும் திருவள்ளுவர் வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் இல்லை. திருவள்ளுவர் விருந்து என்று சொல்கிற விருந்தோம்பல் வைதிக மதத்தில் மனுஷ யக்யம் எனப்படும் விருந்தோம்பல் என்பதே. இன்நும் கொஞ்சம் விரித்தால் அன்னதானம் எனக் கொள்ளலாம்.

 *****

எல்லா உயிர்களின் திருப்திக்காக

தேவதைகளை உத்தேசித்த யாகங்கள், பிதிருக்களை உத்தேசித்த தர்ப்பணம், இவற்றை விடாமல் செய்யவேண்டும். இவற்றோடு தெய்வத்தை உத்தேசித்த பூஜை, அதிதிகளை உத்தேசித்து அன்னமிடுதல், சகல ஜீவராசிகளையும் உத்தேசித்து வைச்வ தேயம் இவற்றையும் நம் முன்னோர்கள் செய்து வந்தனர். நீங்கள் இவற்றைச் செய்கிறீர்களோ இல்லையோ காதினாலாவது இவற்றைப் பற்றிக் கேட்டால் நல்லது. எத்தனையோ படித்திருக்கிறீர்கள். படிக்கின்றீர்கள். எந்தெந்த தேசத்து சரித்திரங்களையோ தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தேசத்தில் யுகாந்தரமாக இருந்து வந்த தர்மங்களையும், அவற்றின் பெயர்களையுமாவது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதைச் சொல்கிறேன். வைச்வதேவம் என்பது இவற்றில் ஒன்று. அது என்ன என்று சொல்கிறேன்.

நமக்கு இந்த உடம்பு இருப்பதால் எத்தனை ஜீவராசிகளுக்கு எத்தனை உபத்திரவம் விளைவிக்கின்றோம்?. நாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதாக பெறுமையாக எண்ணுகிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீடும் ஒரு கசாப்புக் கடையாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு கசாப்புக் கடை அல்ல. ஐந்து கசாப்புக் கடைகள் என்கிறது தர்ம சாஸ்திரம். அந்த ஐந்து என்ன?.
பஞ்சஸுனாக்ரு ஹஸ்தஸ்ய வர்தந்தே (அ ஹரஹ: ஸதா-கண்டினீ பேஷணீ கல்லீ ஜலகும்ப உபஸ்கர;)

அரிவாள்மனை (கண்டினீ) ஒரு கசாப்புக் கடை. அதில்தானே காய்கறிகளை நறுக்குகிறோம். காய்கறிகளும் உயிருள்ளனவை தான். அவற்றை வதைக்குமிடம் ஒருகசாப்புக் கடை.

இரண்டாவது, அம்மி, உரல், எந்திரம், நெல்மிஷன் – இத்யாதி . இவற்றில் தான் கருணையே இல்லாமல் தானியங்களை அரைக்கிறோம்.
இங்கே மாமிச போஜனக்காரர்கள் எழுப்புகிற ஒரு ஆட்சேபணைக்குப் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் சாப்பிடுகிற ஆடு மாடு, கோழிகள் மாதிரி நீங்கள் சாப்பிடுகிற காய்கறி, தான்யாதிகளும் உயிர் இருக்கத்தானே செய்கிறது என்று இவர்கள் சைவ போஜனக்காரர்களைக் கேட்கிறார்கள். வாஸ்தவம். ஆனால் இந்த இரு உணவு முறைகளிடையே அடியோடு வித்தியாசமில்லாவிட்டாலும் (Difference of Kind) ஹிம்ஸை அம்ஸத்தில் வித்தியாசம் (Difference in Degree) இருக்கத்தான் செய்கிறது. தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் இருப்பது வாஸ்தவம் தான் என்றாலும், மனுஷ்யர்களுக்கும் மிருக பட்சிகளுக்கும் உள்ள அசைவுக்கு அவற்றுக்கு வலி (Pain) என்ற உணர்ச்சி கிடையாது. இதை ஸயன்ஸ் படி அளவு எடுத்துக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதுவும் தவிர, அநேகமாக, கீரை மாதிரி சிலவற்றைத் தான் வேரோடு எடுத்துச் சாப்பிடுகிறோமே தவிர, மற்றச் செடிகளின் உயிரை வதைக்காமல் தான் அதிலிருந்து காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். இப்படிப் பறிப்பது நமக்கு தலை மயிரை அல்லது நகத்தை கத்தரிக்கிற மாதிரி. அந்தச் செடிகளுக்கு ரொம்பக் குறைச்சலாகத் தான் வலியுண்டாகும். இற்றுப் போயிருக்கிற பழத்தை மட்டும் புசிப்பதாலோ, இந்த அளவுக்குக் கூட தாவர வர்கத்திற்கு துன்பம் இல்லை. பயிர்கள் நன்றாக முற்றிச் சாய்த்த பிற்பாடு தான் அவற்றை அடித்துத் தான்யங்களை எடுத்துக் கொள்கிறோம். நாம் அறுவடை செய்யாவிட்டாலுங் கூட, அந்தப் பயிர்களே கொஞ்ச நாளில் தாங்களே தலை சாய்த்துப் போகிறவை தான். தாவர உணவு மாமிஸ போஜனத்தை விட உயர்ந்தது என்று இன்னார் விதத்திலும் மாம்ஸ போஜனக்கார்களுக்குப் புரிய வைத்துவிடலாம். இப்போது சில தினுஸான மாம்ஸாதிகளைத் தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள். மாட்டு மாம்ஸம் சாப்பிடலாமே தவிர, குதிரை மாம்ஸம் சாப்பிட்டால் நிஷித்தம் (இழுக்கு) என்கிறார்கள். உலக யுத்தத்தின் போது ஒரு சந்தர்ப்பத்தில் சேனா வீரர்களுக்கு குதிரை மாமிஸம் தரலாமா என்ற கேள்வி வந்த போது, அதை நான்-வெஜிடேரியக்காரர்களே ரொம்பக் கேவலம் என்றார்கள். இதே மாதிரி இவர்கள் மிருக, பட்சிகள், மத்ஸ்யம் முதலானதுகளை சாப்பிடுவது நாகரீகம் தான் என்று சொல்கிறபோதே ஆப்பிரிக்காவில் ஏதோ காட்டு ஜனங்கள் நர மாமிஸம் சாப்பிடுகிறார்கள் என்றால், இவர்கள் அதை அநாகரீகம், காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி நரமாம்ஸ பக்ஷிணிகள் (சிணீஸீஸீவீதீணீறீs) என்று திட்டுகிறார்கள். நாங்கள் சாப்பிடும் வஸ்துக்களைப் போல நீங்கள் சாப்பிடும் தான்யங்களுக்கு உயிர் இருக்கத்தானே செய்கிறது. என்று இவர்கள் நம்மிடம் (சைவ போஜனக்காரர்களிடம்) கேட்கிறபோது, நாம் பதிலுக்கு ஆமாம். ஆனால் அதே மாதிரி ஜீவனாம்ஸை என்று வருகிறபோது எல்லா உயிர்களும் ஒன்று தானே. நீங்கள் ஏன் மநுஷ்யர்களைப் பிடித்துத் தின்னாமல், மனித வர்கத்துக்கும் மிருக வர்கத்துக்கும் வித்தியாசம் பாராட்டுகிறீர்கள். அதே மாதிரி தான். நாங்கள் மிருக வர்கத்துக்கும் தாவரங்களுக்கும் வித்தியாசம் பாராட்டுகின்றோம். மாம்ஸாதிகளைச் சாப்பிடாமல், சாக போஜனமே பண்ணுவது ஸத்வ குண அபிவிருத்திக்கும் அநுகூலமாக இருக்கிறது. என்று சொல்லவேண்டும். தவிர்க்க முடியாமல் நாம் உயிர் வாழ்வதற்காக இப்படி கண்டிணீ பேஷணீ என்ற கசப்பு யந்திரங்களை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்ராவது கசாப்புக்கடை அடுப்பு (சுல்லி). நெருப்பில் பல பூச்சிகள் விழுந்து சாகின்றன. ஒரு இடத்தில் நெருப்பைப் போடுகிறோம். அங்கே ஒர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்.நெருப்புப் பட்டவுடன் அது பொசுங்கிப் போகிறது.

இப்படியே குடத்தை ஒரிடத்தில் வைக்கிறோம். கீழே எறும்போ வேறு ஏதாவது பூச்சியோ இருந்தால் நசுங்கிப் போகிறது. குடம் முதலிய பாத்திரங்களில் ஈரம் இருப்பதால் வெயில் ¢ காலங்களில் எறும்பு முதலிய அதை மொய்த்துக் கொள்கின்றன. அவற்றை நாம் கொல்ல நேருகிறது. இதனால் ஜல கும்பத்தையும் ஒரு கசாப்புக் கடையாக வைத்தார்கள்.

கடைசீயில் உபஸ்காரம் என்பது ஒரு கசாப்புக் கடை. உபஸ்காரம் என்றால் துடைப்பக்கட்டை. பெருக்கும்போது எத்தனை ஜீவராசிகளை வதைக்கிறோம்.

இப்படி ஐந்து கசாப்பு மெஷின்கள் நம் வீடுகளில் இருக்கின்றன. நமக்குத் தீங்கு செய்கிற பிராணிகளுக்குக் கூட நாம் பதிலுக்கு தீங்கு செய்யக்கூடாது. இங்கேயோ தீங்கு செய்பவற்றோடு ஒரு தீங்கும் இழைக்காத பிராணிகளையும் நாம் இத்தனை ஹிம்ஸைக்கு ஆளாக்க நேருகிறது. யோசித்துப் பார்த்தால் இத்தனை ஜீவராசிகளுக்கு இத்தனை உபத்திரவத்தை உண்டாக்குக் கொண்டு வயிற்றை வளர்க்கிறோமே என்று துக்கம் உண்டாகிறது. ஆனால் இதெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள். நாம் வேண்டுமென்று இவற்றைக் கொல்லவில்லை. எனவே நம்மை மீறிச் செய்கிற இந்தத் தோஷங்களுக்குப் பிராயச்சித்தம் உண்டு. அப்படிச் செய்கிற பிராயச்சித்தமே வைசுவதேயம் என்பது. நம்மால் ஹிம்சைக்கு ஆளான ஜீவராசிகளுக்கெல்லாம் நல்லகதி கிடைக்க வேண்டும். நம்மை பகவான் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எல்லா உயிர்களின் திருப்த்திக்காகவும் பலி கொடுக்கப்படுகிறது. இந்த விசுவத்தில் எவ்வளவு பிராணிகள் உண்டோ, நாய், காக்கை, சமூகப் பிரஷ்டன் உள்பட எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும் வைசுவதேவத்தில் பலி உண்டு. வைசுவதேயம் செய்தால் நாம் செய்கிற பல தேஷங்கள் போகும்.  பல உயிர்களுக்கு ஆகாரம் கிடைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s