பிரம்மணீயம் – மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கை முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே.

தொழில் /கடமை             Responsibilities அந்தணர் Knowledged அரசர் Rulers வைசியர்

Merchants

சூத்திரர் (சூத்திரம்
அறிந்தவர்)
Technicians
வேதங்கள் ஓதல் Reciting the Vedic Scriptures x x x
வேதங்கள் ஓதுவித்தல் Teaching the Vedic Scriptures x
வேட்டல் (வேள்வி செய்தல்) Performing Spiritual Rituals x x x
வேட்பித்தல் (வேள்வி செய்வித்தல்) Performing Spiritual Rituals for others x
ஈதல் Donations for Spiritual Activities x x x
ஏற்றல் Accepting donations for sustenance x
உலகோம்பல் Governing the geographical territory x
படைப்பயிற்றல் Managing the Army x
பொருதல் Conducting Warfare x
பொருளீட்டல் Acquiring and Managing Wealth x x
பசுக்காத்தல் Tending of Cows x
ஏருழல் Owning Agriculture x
முதன் மூவர்க்கு உதவி செய்தல் Complementing the efforts of other three Divisions x
உழுதல் Agriculture x
குயிலூவத் தொழில் செய்தல் Playing of Wind Instruments x
காருகவினைகளாக்கல் Engaging in activities which involve intense physical effort x

பிராம்மணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் (சூத்திரம் – செய்முறை அறிந்தவர்கள்) உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர்.

பிராம்மணன் என்பவன் பிறப்பால் பிரம்மணீயத்தை ஏற்றுக்கொண்டவன் அல்ல. ‘பிரம்மம்’ என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல். பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு “நிலை“. இறையானுபவத்தில் ஈடுபடும் எவரும் அந்த நிலைக்கு தங்களை கொண்டு செல்ல பிரயத்தனப்படுபவர்கள் ஆவார்கள்.

எனவே ஸ்வபாவத்தால் ஏற்படுகின்ற தொழில் ஒன்றானாலும், சிந்தையால் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதன் மூலமே ஒருவன் உயர்ந்தவன் எனப்படுவதும், தாழ்ந்தவன் என்ப்படுவதும் ஆகும். ஜாதி வேறுபாடுகளையும், அவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வுகளையும் மனுஸ்ம்ருதியோ, மஹாபாரதமோ சொல்லவில்லை.

 அன்றைக்கிருந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஒருவனை தோஷமடையச் செய்வது எது, வர்ணமா, கர்மமா? இன்றைய சூழ்நிலையில் ஜாதியா, கர்மமா (செயலா) என்று கேட்கலாம்.

இதற்குப் பதில், எந்த ஜாதியாக இருந்தாலும், ஒருவன் துஷ்கர்மத்தைச் செய்தாலும், துர் நடத்தை இருந்தாலும், அதுவே ஒருவனுக்கு தோஷத்தைத் தரும் என்று சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

மனு ஸ்ம்ருதியைப் பொருத்தவரையில், அதன் கருத்துக்கள் மஹாபாரதத்தில் வாழ்க்கைக்குத் தக்கவாறு விளக்கப்பட்டுள்ளன. யுதிஷ்டிரர் கேட்ட தர்ம சம்பந்தமான கேள்விகளுக்கு, பீஷ்மரைப் பதில் சொல்லுமாறு கிருஷ்ணன் கேட்டுக் கொண்டான். அந்தப் பகுதி சாந்தி பர்வம் என்று அழைக்கப்படுகிறது. மனு ஸ்ம்ருதியில் காணப்படும் விஷயங்களுக்கு இந்த பர்வத்தில் விடைகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.

 முக்கியமாக, வர்ணம் என்பதும் ஜாதி என்பதும் ஒன்றா? ஜாதியினால் ஒருவன் தாழ்ந்தவனாக ஆகிறானா என்பதற்கு பீஷ்மர் தரும் விளக்கங்கள் பதிலளிக்கின்றன.

வர்ணம் என்பதும், ஜாதி என்பதும் ஒன்றல்ல. சுபாவத்தைக் கொண்டு வர்ணமும், தொழிலைக் கொண்டு ஜாதியும் சொல்லப்பட்டது. ஒருவனே இவற்றில் மாறி மாறி வர முடியும்.

இறையானுபவத்தில் ஈடுபட்டு பரம்பொருளைத் (பிராமணீயத்தை) தழுவிய ஆழ்வார்கள் நாயன்மார்கள், சித்தர்கள் ,நெறியாளர்கள் மற்றும் அருளாளர்கள் சிலர் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.:

இவர்கள் பிறப்பால், வெவ்வேறு மரபு / ஜாதி / சுபாவம் / தொழில் / மொழி பின்னணி உடையவர்கள் என்றாலும் இறையானுபவத்தில் ஈடுபட்டதால் பிரம்மணீயத்தைத் தழுவியவர்கள் என்று கருதப்பட்டு, கடவுளாக வழிபாடு செய்யப்படுகின்றனர். ( சிலரை பற்றிய குறிப்புகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட மரபு காணப்படுகிறது )

  ஆழ்வார்கள் மரபு
01 பொய்கையாழ்வார் அயோநிஜர் (ரிஷிகளாக இருந்தவர்)
02 பூதத்தாழ்வார் அயோநிஜர் (ரிஷிகளாக இருந்தவர்)
03 பேயாழ்வார் அயோநிஜர் (ரிஷிகளாக இருந்தவர்)
04 திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்
05 நம்மாழ்வார் வேளாளர்
06 மதுரகவி ஆழ்வார் சோழிய மரபு அந்தணர்
07 குலசேகர ஆழ்வார் அரசர்
08 பெரியாழ்வார் வேயர் குல அந்தணர்
09 ஆண்டாள் அந்தணர்
10 தொண்டரடிப் பொடியாழ்வார் அந்தணர்
11 திருப்பாணாழ்வார் பாணர்
12 திருமங்கையாழ்வார் கள்வர்
  நாயன்மார்கள் மரபு
01 அதிபத்தர் பரதவர்
02 அப்பூதியடிகள் அந்தணர்
03 அமர்நீதியார் வணிகர்
04 அரிவட்டாயர் வேளாளர்
05 ஆனாயர் இடையர்
06 இசைஞானியர் ஆதி சைவர்
07 இடங்கழியார் செங்குந்தர்
08 இயற்பகையார் வணிகர்
09 இளையான்குடி மாறன் வேளாளர்
10 உருத்திரபசுபதியார் அந்தணர்
11 எறிபத்தர் செங்குந்தர்
12 ஏயர்கோன்கலிக்காமர் வேளாளர்
13 ஏனாதி நாதர் சான்றார்
14 ஐயடிகள் காடவர் கோன் குறுநில மன்னர்
15 கணநாதர் அந்தணர்
16 கணம் புல்லர் செங்குந்தர்
17 கண்ணப்பர் வேடுவர்
18 கலிக்கம்பர் செக்கார்
19 கலியர் செக்கார்
20 கழறிற்றறிவார் அரசர்
21 கழட்சிங்கர் குறுநில மன்னர்
22 காரியார் செங்குந்தர்
23 குங்கிலியக்கலயர் அந்தணர்
24 காரைக்கால் வணிகர்
25 குலச்சிறையார் மரபு அறியார்
26 கூற்றுவார் வணிகர்
27 கோச்செங்கட்சோழர் அரசர்
28 போட்புலியார் வேளாளர்
29 சடையனார் ஆதி சைவர்
30 சண்டேசுரர் அந்தணர்
31 .சந்தியார் வேளாளர்
32 சாக்கியர் வேளாளர்
33 சிறுப்புலியார் அந்தணர்
34 சிறுத்தொண்டர் சாலியர்
35 சுந்தரர் ஆதி சைவர்
36 செருத்துணையார் வேளாளர்
37 சோமாசிமாறர் அந்தணர்
38 தண்டியடிகள் செங்குந்தர்
39 திருக்குறிப்புத்தொண்டர் ஏகாலியர்
40 திருஞானசம்பந்தர் அந்தணர்
41 திருநாவுக்கரசர் வேளாளர்
42 திருநாளைபோவார் புலயர்
43 திருநீலகண்டர் குயவர்
44 திருநீலகண்டயாழ்பாணர் பாணர்
45 திருநீலநக்கர் அந்தணர்
46 திருமூலர் இடையர்
47 நமிநந்தியடிகள் அந்தணர்
48 நரசிங்கமுனையாரையர் குறுநில மன்னர்
49 நின்றசீர்நெடுமாறர் அரசர்
50 நேசர் சாலியர்
51 புகழ்ச்சோழர் அரசர்
52 புகழ்த்துனையார் ஆதி சைவர்
53 பூசலார் அந்தணர்
54 பெருமிழவககுரும்பர் செங்குந்தர்
55 மங்கயற்கரசியார் அரசர்
56 மானக்கஞ்சாறர் வேளாளர்
57 முருகர் அந்தணர்
58 முனையடவார் வேளாளர்
59 மூர்க்கர் வேளாளர்
60 மூர்த்தியார் வணிகர்
61 மெய்ப்பொருளார் குறுநில மன்னர்
62 வாயிலார் வேளாளர்
63 விறண்மிண்டர் வேளாளர்
  நெறியாளர்கள் / அருளாளர்கள் மரபு
01 திருமுருக கிருபானந்த வாரியார் செங்குந்த வீர சைவர்
02 தாயுமான சுவாமிகள் சைவ குல வேளாளர்
03 அருணகிரிநாதர் மரபு அறியார்
04 பட்டினத்தார் வணிகர்
05 துளசிதாசர் அந்தணர்
06 கபீர் தாஸ் இஸ்லாமியர்
07 வீரமாமுனிவர் கிறித்தவர்
08 கம்பர் ஒச்சர் (நாதஸ்வரம் வாசிப்பவர்கள்)
  தமிழ்ச் சித்தர்கள் மரபு
01 பதஞ்சலி ரிஷி குமாரர்
02 அகத்தியர் வேளாளர்
03 கமலமுனி குறவர்
04 திருமூலர்
05 குதம்பையார் கோனார்
06 கோரக்கர் விசேஷமாகப் பிறந்தவர்
07 தன்வந்திரி விஷ்ணுவின் அவதாரம்
08 சுந்தரானந்தர் அகமுடையர்
09 கொங்கணர் விஸ்வகர்மா – ஆசாரி
10 சட்டமுனி சிங்களர்
11 வான்மீகர்
12 ராமதேவர் யாக்கோபு   (இஸ்லாமியர்)
13 இடைக்காடர் இடையர் – (ஆடு மாடு மேய்ப்பவர்)
14 மச்சமுனி விசேஷமாகப் பிறந்தவர்
15 கருவூரார்
16 போகர் விஸ்வகர்மா – ஆசாரி
17 பாம்பாட்டி
18 சிவவாக்கியர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s