அமாவாசை தர்ப்பணம்

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று உச்சரிக்கப்பட வேண்டிய

மந்திரம்:

ஏ ஷாம் – ந மாதா – ந பிதா – ந ப்ராதா – நச – பாந்தவாஹா


தே சர்வே – த்ருப்திம் ஆயாந்து – மயா

உத் ஸ்ருஷ்டைஹி – குஷ – உதகைஹி


த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்

என்ற மந்திரத்தை வீட்டில் முன்னோர்களை நினைத்துச் சொல்ல

வேண்டும்.

இதன் பொருள்

‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ,

சகோதரர்கள் இல்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள்

இல்லையோ… இதுபோன்று யாருமே அற்றவர்களுக்கு, நான்

அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீரும் திருப்தியை அளிக்கட்டும்’

என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும்

நன்மை அடையவேண்டும்

எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சனாதன தர்ம

சாஸ்திரம்.

இந்த உயரிய பண்பை நடைமுறையில் செய்து கொண்டிருப்பவர்

பற்றிய ஒரு செய்திக் குறிப்பு

https://m.dinamalar.com/detail.php?id=3130110